வாரம் இரு நாட்கள் இந்த ஜூஸை குடிங்க.... கல்லீரலை சுத்தப்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கல்லீரல் வளர்சிதை மாற்றம், கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லீரல் ஜீரணத்தை செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என வேலைகளை செய்கிறது.

வாரம் ஒரு முறையாவது கல்லீரைலை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

அந்தவகையில் கல்லீரை சுத்தப்படுத்தும் அற்புத ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையானவை
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.

இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு கொண்டு சென்று விடும்.

கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிபடுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்து பாருங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்