மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை குறைக்க வேண்டுமா? நிலக்கடலை இப்படி செஞ்சு குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நட்ஸ்களில் ஒன்று தான் நிலக்கடலை.

சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது.

மேலும் நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.

இதுமட்டுமின்றி இதில் தயாரிக்கப்படும் பாலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த நிலக்கடலையை பால் எடுத்து குடித்தால், சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுபுரிக்கின்றது.

தற்போது இந்த நிலக்கடலை பாலை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • நிலக்கடலை - 1 கப்
  • முந்திரி - 5
  • ஏலக்காய் - சிறிது
செய்முறை

நிலக்கடலையை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். முந்திரியையும் ஊற வைக்கவும்.

பின் அந்த நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதோடு ஊற வைத்த முந்திரியையும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.

பின் இவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது ஏலக்காய் சேர்த்து, நீர் ஊற்றி அரைத்தால், சுவையான நிலக்கடலை பால் தயார்.

நன்மை
  • நிலக்கடலைக்கு அனைத்துவிதமான இரத்தக்கசிவையும் தடுக்கும் ஆற்றல் உண்டு. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலையை சாப்பிடுவது அதிகமான இரத்தப்போக்கைத் தடுக்கும்.
  • நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் மூளை சுறுசுறுப்பாகவும், எலும்புகள் வலிமையாகவும் இருக்கும்.
  • நிலக்கடலையில் இருக்கும் நியாசின் புண்கள், கொப்புளங்கள் போன்றவற்றை விரைவில் சரிசெய்வதோடு, வராமலும் தடுக்கும். மேலும் நிலக்கடலை சருமத்தைப் பளபளப்போடு வைத்துக் கொள்ளும்.
  • உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலையை சாப்பிட, அதிகளவு உணவு உட்கொள்ள முடியாமல் போய், உடல் மெலிய ஆரம்பிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers