சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க வேண்டுமா? இதில் ஒரு பானத்தை தினமும் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம்.

சிறுநீரக கற்கள் உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும்.

முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும்.

மேலும் சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக்கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும்.

இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து வரலாம்.

இதிலிருந்து எளிதில் விடுபட இயற்கை முறையில் செய்யப்படும் பானங்களே சிறந்தது. அந்தவகையில் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

  • துளசியில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் இது சிறுநீரக கற்களை உடைத்தெறியும். துளசி டீயை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து கூட குடிக்கலாம். இதனால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.
  • சிறுநீரக கல் உள்ளவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் கரைத்துவிடும். இந்த கலவையை சிறுநீரக கற்கள் வெளியேறிய பின்னரும் குடித்து வர வேண்டும். இதனால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
  • திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள் அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்களைக் கரைத்துவிடும்.
  • பீட்ரூட் ஜூஸ் குடிப்பது, அதிகளவு ஆக்ஸிஜனை இரத்தம் சுமந்து செல்ல உதவும். மேலும் இது குளுததையோனை உற்பத்தி செய்து, டாக்ஸின்களை நடுநிலைப்படுத்தி, உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றும்.
  • ஆப்பிள் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
  • இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை உள்ளது. இதில் மக்னீசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்களின் அளவு குறைந்து, சிறுநீரின் வழியே அவை வெளியேறிவிடும்.
  • தர்பூசணியை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் செய்து குடித்தாலோ, இரண்டுமே சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும். தர்பூசணியை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
  • எலுமிச்சையில் சிட்ரேட் என்னும் உட்பொருள் உள்ளது. இது சிறுநீரக கற்களைக் கரைத்து, சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்