ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த மூலிகைப் பொடியை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கடைகளில் விற்கும் கண்ட கண்ட மருந்துகளை போடமால் வீட்டிலே இதற்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • நல்லெண்ணெய் - கால் கப்
  • நெல்லிக்காய் பொடி - கால் கப்
  • மஞ்சள்- 1 ஸ்பூன்
  • பட்டைப் பொடி - கால் ஸ்பூன்
  • கிராம்புப் பொடி - அரை ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்.

செய்முறை

மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம்.

அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.

இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும்.

இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும்.

பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.

நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது.

நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers