நெஞ்செரிச்சலை எளிதில் போக்கணுமா? அப்போ இந்த லேகியத்தை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.

மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன.

இதனால் பெரும்பாலனோர் அடிக்கடி அவதிப்படுவதுண்டு.

இதிலிருந்து எளிதில் விடுபட இதற்கு ஒரு லேகியம் ஒன்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த லேகியத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • சீரகம் - நூறு கிராம்
  • எலுமிச்சைச் சாறு - 25 ml
  • வெல்லம் - தேவையான அளவு
  • நாட்டு முட்டை - வெள்ளக் கரு மட்டும்
செய்முறை

முதலில் சீரகத்தை பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்து வைக்கவும்.

அதன் பின் இந்த சீரகத் தூளை தேவையான அளவு எலுமிச்சைச் சாற்றில் ஊற வைக்கவும்.

வெல்லத்தைப் பாகாக காய்ச்சி கம்பிப் பதம் வந்தவுடன் அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி பின் வெள்ளைக் கருவை மட்டும் ஊற்றிக் கிளறி பின் எலுமிச்சைச் சாற்றில் ஊறிய சீர்கத்தூளைப் போட்டுக் கிளறவும்.

இறுதியாக நன்கு லேகியப் பதம் வரும்போது சிறிது நெய் ஊற்றிக் கிளறி அதன் பின் சிறிது தேன் ஊற்றிக் கிளறி நல்ல லேகியமாக்கி இறக்கவும்.

இந்த லேகியத்தைத் தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல் குணமாகும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...