நீங்கள் கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுபவரா? அப்போ முதலில் இத படிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சிலர் கொழுப்புகளை நிறைந்த மேற்கத்திய உணவுகளை தான் விரும்பி உண்ணுவார்கள்.

இதனால் 30 களின் ஆரம்பத்திலேயே செரிமானப் பிரச்சனைகள், அசிடிட்டி, வாய்வுப் பிடிப்பு, கொலஸ்ரோல் போன்றவை மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கிறது.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • எந்த வகைம் கொழுப்பு உணவுகள் சாப்பிட்டாலும் வெதுவெதுப்பான நீரை உடனடியாக குடித்துவிடுங்கள். இவை உங்கள் விரைவில் செரிமான சக்தியை தூண்டுகிறது. கொழுப்பு வேகமாக எரிக்கப்படுகிறது.
  • 10 நிமிடங்கள் மெல்ல வாக்கிங்க் போனால் அமிலங்கல் சுரப்பது வேகமாகும். இதன் மூலம் கொழுப்பு உடனடியாக எரிக்கப்படுகிறது.
  • கொழுப்பு உணவுகளை சாப்பிட்டதும் உடனடியாக தூங்கச் சென்றுவிடாதீர்கள். ஏனென்றால் இவை அஜீரணம் மட்டுமல்லாது பலவித நோய்களை தரும். கொழுப்புகள் செரிக்கப்படாமல் உடலில் அதிகமாகிவிடும்.
  • நிறைய பேர் சாப்பிடதும் ஐஸ்க்ரீம் அல்லது கோக் போன்ற குளிர்பானங்கள் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மிகவும் தவறு. கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டதும் குளிர்ந்த உணவுகளிய உட்கொண்டால் அவை செரிப்பதை இன்னும் தாமதப்படுத்தும்.
  • கொழுப்பு உணவுகளை சாப்பிட்டபின் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானத்திற்குட்படும்.
  • வால் மிளகு கொழுப்பு உடைக்கக் கூடியது. இதன் சூட்டுத்தன்மையாலும், காரமான தன்மையாலும், கொழுப்பு வேகமாக கரைக்கப்படுகிறது. ஆகவே வால்மிளகுப் பொடியை 1/1 ஸ்பூன் அளவு மோரில் அல்லது நீரில் கரைத்து குடியுங்கள்.
  • தேன் கிருமி நாசினி மட்டுமல்லாது எளிதில் செரிக்க வைக்கும் தன்மையும் கொண்டது. விரைவில் கொழுப்பை கரைகக் கூடியது. சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். கொழுப்பு உணவுகள் வேகமாக கரையும்.
  • குக்குலு ஒரு ஆயுர்வேத மூலிகை. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை பெற்றது. உடல் பருமனானவர்கள் கூட இதனை சாப்பிடலாம். மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றி சாப்பிடுங்கள்.
  • கோமியம் நிறைய மருத்துவ தன்மைகளைக் கொண்டது. நீங்கள் நம்புங்கள். உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.
  • இஞ்சியை தட்டி தே நீர் செய்து கொழுப்பு உணவுகளை சாப்பிட்டபின் உடனடியாக குடிக்கவும். இது செரிமானத்தை தூண்டுகிறது. பொதுவாகவே கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை கொண்டது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்