உடலில் சேரும் கொழுப்புக்களை விரைவில் கரைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களில் ஒன்றை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் சிறுவயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்ணுவதனால் ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது.

அது மட்டுமின்றி உடலில் கொழுப்புக்கள் சேருவதனால் இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இள வயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.

குறிப்பாக ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுமுறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபடவும் கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் இயற்கையான ஜூஸ்கள் என்ன என்பதனை பார்ப்போம்.

  • முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள டார்டாரிக் ஆசிட், உடலில் சேரும் சர்க்கரை கொழுப்புக்களாக மாறுவதைத் தடுக்கும். மேலும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது.
  • பார்ஸ்லி ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுமிக்க பொருளை வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையவும் செய்யும்.
  • தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமெனில், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் காலையில் உணவு உண்ணும் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
  • இலந்தைப்பழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி2 போன்றவைகள் வளமாக உள்ளது. இந்த இலைகளை இரவில் தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறுடன், 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, மாலை வேளையில் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர தொப்பையைக் குறைக்கலாம்.
  • கேரட் ஜூஸ் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் பெரிதும் உதவி புரியும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.
  • வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளதால், இதனை குடித்தால், வயிறு விரைவில் நிரம்பிவிடும். மேலும் வெள்ளரிக்காய் கொழுப்பு செல்களை உடைத்துவிடும். அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும்.
  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்புக்களை கரையும்.
  • பீச் பழத்தினால் செய்யப்பட்ட ஜூஸை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், ஒரே மாதத்தில் குறிப்பிட்ட அளவில் உடல் எடையைக் குறைந்திருப்பதைக் காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்