மீன்களின் கண்களை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

மீனை பெரியவர்கள் முதல் சிறிவர்கள் வரை அனைவரும் விருப்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும்.

அந்தவகையில் சாப்பிடும்போது அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. தற்போது அவற்றில் சிலவற்றை பாரப்போம்.

 • பார்வை பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி மீனின் கண்களை சாப்பிட்டு வந்தால், பார்வை கோளாறு நீங்கிவிடும்.

 • மீன்களை கண்களுடன் அடிக்கடி சாப்பிட்டு வந்தவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதர இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறைவாக இருக்கும் எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க மீன் கண்களை தவறாமல் சாப்பிடுங்கள்.

 • மனநல பிரச்சனைகளான மன இறுக்கத்தில் இருந்து விடுபட மீன்கள் உதவியாக இருக்கும் ஏனெனில் மீன்களை கண்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடி விடுவிக்கும்.

 • மீன்களை கண்களுடன் சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு மேம்பட்டு, நினைவாற்றல் மேம்படுவதோடு, உணர்வுகளும் சீராக இருக்கும். எனவே நீங்கள் ஸ்மார்ட்டாக செயல்பட விரும்பினால், அடிக்கடி மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

 • தொடர்ந்து ஆறு வாரங்கள் மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு, மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்தத்தில் உள்ள அழற்சியைக் குறைக்கும்.

 • மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவைக் குறைக்கும். அதோடு மீன்களை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைப்பதோடு தடுக்கலாம்.

 • மீன்களின் கண்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் டி நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

 • மூட்டு வலியில் இருந்து அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கும். இத்தகைய கொழுப்பு அமிலங்கள் மீன்களின் கண்களில் அதிகளவு நிறைந்துள்ளது. ஆகவே மூட்டு வலி உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

 • குழந்தைகளுக்கு மீன்களை கண்களுடன் கொடுத்து வந்ததில், குழந்தைகளுக்கு ஆஸ்துமாவின் அபாயம் குறைவாக இருக்கும்.

 • மீன்களின் கண்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதாவும், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதாகவும், இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

 • தொடர்ந்து மீன் மற்றும் அதன் கண்களை உட்கொள்பவர்களுக்கு, செரிமானம், வாய், குரல்வளை, குடல் மற்றும் கணைய புற்றுநோயின் அபாயம் குறைவாக இருக்கும்.

 • மீன் கண்களை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ஆட்டோ இம்யூன் நோய்களின் அபாயம் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்