இந்த ஒரே மரத்தினால் இத்தனை நோய்களுக்கு தீர்வு...!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பல்வேறு நோய்களுக்கான தீர்வாக ஒரு மரம் செயல்படுகின்றது. அது என்ன என்று பார்க்கலாம்.

இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.

இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது.

இதில் அதிக அளவு புரதச்சத்தும் கால்சியம் மற்றும் பாஸ்பரசும் கொண்டது.

சரும நோய்கள், தலைவலி, விஷக்கடி, மலச்சிக்கல், மூலநோய், நீரிழிவு நோய், டான்சில், இதய நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது.

மேலும் இது பல பிரச்சினைக்கு எளிதில் தீர்வு அளிகின்றது. தற்போது இதன் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

  • கரப்பான், பெரிய கடி விஷம், கடுவன் விஷம் ஆகிய கொடிய விஷக் கடிக்கு கடித்த இடத்தில் இலுப்பை நெய்யைத் தடவினால் போதும் விஷம் உடனே முறிந்துவிடும்.
  • இந்த இலுப்பை காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது மூட்டு வலி, முதுகு வலி போன்ற தீராத வலிகளையும் போக்கும் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.
  • இலுப்பைப் பூவை பாலில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலிமை பெறும்.
  • இலுப்பையின் புண்ணாக்கை வைத்து ரணம், வோதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்கள், சிரங்கு போன்ற நோய்களைக் குணப்படுத்திவிட முடியும்.
  • பித்தத்தால் உண்டாகும் காய்ச்சலும் அடிக்கடி தாகம் எடுப்பது, ரத்த சர்க்கரை நோய் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த இலுப்பைப் பூ பயன்படும்.
  • இலுப்பை மலர்கள் நாம் எடுத்துக் கொள்வதின் மூலம் அந்தரங்கப் பகுதியில் தேங்கும் வாய்வுப் பிரச்சினை நீங்கும்.
  • விந்து முந்துதல் என்னும் இழப்பு மற்றும் விந்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யவும் இலுப்பையின் வேரை பொடியாக்கி பாலில் போட்டு குடித்து வாருங்கள்.
முக்கிய குறிப்பு

இதில் உள்ள ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் சருமப் பிரச்சினைகளைத் தீர்த்தாலும் தலைமுடிக்கு ஆகாது.

உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு பயன்பெறுவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers