சிவப்பு குடமிளகாயை பச்சையாக சாப்பிடலாம்? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

மிளகாயில் சிவப்பு குடைமிளகாயே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

இந்த சிவப்பு மிளகாயை அப்படியே சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும்.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் என்று எல்லாம் இருப்பதால் தினசரி உணவில் கூட இதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

அந்தவகையில் சிவப்பு குடை மிளகாய் சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • சிவப்பு மிளகாயில் அதிகளவு விட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது.
  • உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த சிவப்பு மிளகாயை எடுத்து வரலாம். இது உடம்புக்கு சூடு அளித்து அதன் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும். எனவே உடனடியாக உடல் எடை கட்டுக்குள் வந்து விடும்.
  • சிவப்பு மிளகாயில் உள்ள நார்ச்சத்துகள், ஊட்டச்சத்துகள், விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால் தேவையில்லாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே நிரழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
  • சிவப்பு மிளகாய் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளான எல். டி. எல் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. எனவே இதய நோயாளிகள் இதை எடுத்து வந்தால் நல்லது.
  • சிவப்பு மிளகாயில் உள்ள சல்பர் பொருள் செல்கள் பிறழ்ச்சி ஆவதை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நமது உடலை காக்கிறது.
  • சிவப்பு மிளகாயில் உள்ள கரோட்டீனாய்டு ஆர்த்ரிட்டீஸ் நோயால் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது.
  • சிவப்பு மிளகாயில் உள்ள சல்பர் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. சிவப்பு மிளகாய் ஜூஸ் எடுத்து பயன்படுத்தி வந்தால் சீக்கிரமே மூட்டுவலி சரி ஆகிவிடும் .
  • சிவப்பு மிளகாயில் உள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.எனவே மிளகாயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
  • நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் பி6 நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும், நரம்பு செல்களை புதிப்பிக்கவும் பயன்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்