ஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா ? அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க எவ்வளவோ டயட்டுகள் இருந்தாலும் சில டயட்டுக்கள் மற்றுமே சரியாக செயல்படுகின்றது.

இந்தவகையில் இயற்கையாகவே ஏழே நாளில் உடல் எடையினை குறைக்க MIND டயட் என்றழைக்கப்படும் டயட் பெரிதும் உதவி புரிகின்றது.

இது உடலுக்கு பலவகையில் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி புரிகின்றது.

MIND டயட், புற்று நோயை எதிர்த்து போராட சிறந்த நன்மையைத் தருகிறது.

இந்த MIND டயட் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவி, நீரிழிவு வளர்ச்சி பெரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

பதட்டம், மனச்சோர்வு, மனச்சிதைவு என்னும் ஷிசொபெர்னியா போன்ற பல்வேறு மனநிலைத் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும், நிர்வகிக்கவும் MIND டயட் உதவுகிறது.

இந்த MIND டயட், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்க்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

MIND டயட்டில் பல்வேறு வகையான உணவுகள் இணைக்கப்பட்டிருப்பதால் , அழற்சியைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவி புரிகின்றது.

மேலும் இந்த MIND டயட் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை புரிகிறது. அதில் முக்கியமான நன்மைகளில் ஒன்று ஆரோக்கியமான வலி மேலாண்மைக்கும் உதவி புரிகின்றது.

தற்போது இந்த MIND டயட்டை எப்படி பின்பற்றுவது என்பதை பார்ப்போம்.

முதல் நாள் - திங்கள்

காலை உணவு - நறுக்கிய பாதாம் துண்டுகள் அலங்கரிக்கபட்ட ஸ்ட்ரா பெர்ரி சேர்க்கபட்ட கிரீக் யோகர்ட்.

மதிய உணவு - ஆலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்ட மெடிடரேனியன் சாலட், கிரில் சிக்கன், முழு கோதுமை பிரட்

இரவு உணவு : காராமணி சேர்க்கபட்ட பழுப்பு அரிசி, வேகவைத்த காய்கறிகள், க்ரில் சிக்கன்

இரண்டாம் நாள் - செவ்வாய்க்கிழமை

காலை உணவு - கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்

மதிய உணவு - க்ரில் சிக்கன் சான்ட்விச் மற்றும் வேகவைத்த கேரட்

இரவு உணவு - கிரில் சால்மன், ஆலிவ் எண்ணெய் சேர்க்கபட்ட சாலட், பழுப்பு அரிசி

மூன்றாம் நாள் - புதன் கிழமை

காலை உணவு - ஸ்ட்ராபெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ் மற்றும் வேக வைத்த முட்டை

மதிய உணவு - காராமணி சேர்க்கபட்ட காய்கறி சாலட், சிவப்பு வெங்காயம், சோளம் மற்றும் க்ரில் சிக்கன்

இரவு உணவு - லேசாக வறுத்த சிக்கன் மற்றும் காய்கறி, மற்றும் பழுப்பு அரிசி

நான்காம் நாள் - வியாழக்கிழமை

காலை உணவு - வேர்க்கடலை வெண்ணெய், வாழைப்பழம் மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட்

மதிய உணவு - வேக வைத்த மீன் (உங்கள் விருப்பமான மீன்) மற்றும் வேக வைத்த காய்கறிகள்

இரவு உணவு - முழு கோதுமை பாஸ்தா, மீட் பால்ஸ் மற்றும் சாலட்

ஐந்தாம் நாள் - வெள்ளிக்கிழமை

காலை உணவு - கோதுமை டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்

மதிய உணவு - வேக வைத்த சிக்கன், காய்கறி சாலட் அல்லது மிதமாக பொரித்த காய்கறிகள்

இரவு உணவு - ஓவனின் பொரித்த அல்லது வேக வைத்த உருளைக் கிழங்கு மற்றும் மீன்

ஆறாம் நாள் - சனிக்கிழமை

காலை உணவு - பெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ்

மதிய உணவு - பழுப்பு அரிசியுடன் வேக வைத்த மீன் மற்றும் பீன்ஸ்

இரவு உணவு - சிக்கன் சேர்க்கபட்ட காய்கறி சாலட் மற்றும் முழு கோதுமை பாஸ்தா

ஏழாம் நாள் - ஞாயிற்றுக் கிழமை

காலை உணவு - வேர்க்கடலை வெண்ணெயுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் முழு கோதுமை பிரட்

மதிய உணவு - டூனா மீன் சாலட் சான்ட்விச் மற்றும் கேரட்

இரவு உணவு - சிக்கன் கறி, பழுப்பு அரிசி மற்றும் பயறு

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்