பொதுவாக அனைவரும் காலநிலை மாற்றம் அடைய எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு விடுகின்றது.
அதில் பெரும்பாலானோர் வறட்டு இருமலால் அவதிப்படுவர்கள் தான்.
இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும்.
இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் எரிச்சலுணர்வை உண்டாக்குகின்றது.
இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.
- சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம்.
- ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.
- புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம்.
- மாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
- பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.
- பொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து இரண்டும் சம அளவில் அளவுடன் இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
- ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.