நீண்ட நாட்களாக வாய் உலர்தல் பிரச்சினையா? இதோ எளிய வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வாய் உலர்தல் என்பது வயது வந்தோருக்கு இன்றைய காலத்தில் சாதாரணமாகத் தோன்றுவதாகும்.

வாய் உலர்ந்து போதல் அல்லது ஸேரோஸ்டோமியா( xerostomia) என்பது உங்கள் வாயை ஈரமான நிலையில் வைக்கப் போதுமான உமிழ்நீர் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலைமையேயாகும்.

இதற்கு பல அறிகுறிகள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக சுவை திறன் குறைதல், உலர் இருமல் மற்றும் உலர்ந்த நாசிப்பாதை, உங்கள் வாயின் மூலைகள் வறண்டுபோதல், ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் சிதைவுறும் பற்கள், போன்றவை ஆகும்.

வாய் உலர்தலில் இருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை முறை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • பச்சைத் தேயிலை இலைகள் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்
  • தேன் (விரும்பினால்)
செய்முறை

முதலில் சில பச்சை தேயிலை இலைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவும்.

இதை வடிகட்டி தேனை சுவைக்குச் சேர்த்து உடனடியாக உட்கொள்ளவும்.

பச்சை தேயிலை தேநீரை தினமும் 2 முதல் 3 முறை குடிக்கவும்.

பச்சை தேயிலை, இஞ்சி டீ போன்று உலர்ந்த வாய்க்கு சிகிச்சையளிக்கும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும்.

இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பால் அது சாத்தியமாகிறது. மற்றும் உங்கள் வாயில் பற்கள் குழிவுறுதலை தடுக்கும் வேலையையும் செய்கிறது. கூடுதலாக, பச்சைத்தேயிலை உமிழ்நீர் ஓட்டத்தையும் தூண்டுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers