உங்களுக்கு அடிக்கடி கண் சிவக்கின்றதா? அப்போ இந்த டீ தூளை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சிலருக்கு கோபத்திலும் தூக்கமின்மையாலும் தூசு விழுந்தாலும் கண்கள் சிவப்பது இயற்கை என்று சொல்லப்படுகின்றது.

கண் சிவக்க வைரஸ் தொற்று, அதிக சூரிய ஒளி என பல்வேறு காரணங்களும் உண்டு.

அடிக்கடி கண் சிவப்பதற்கு அலர்ஜி, தூசு, நாய், பூனை முதலான வளர்ப்பு பிராணிகளின் ரோமம், பூக்களில் உள்ள மகரந்தத் தூள், ரசாயனம் போன்றவை முக்கிய காரணங்கள். இவை கண்களை சிவக்கச் செய்வதுடன், கண்களில் அரிப்பையும் உண்டாக்கி விடுகின்றது.

அரிப்பு அதிகரிக்கும்போது, கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கும். இதன்போது கைகளை கொண்டு கண்கள் கசக்கும்போதும் கண்கள் எளிதில் சிவந்து விடுகின்றது.

இதற்காக மருந்துவரை தான் சென்று பாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்து கூட எளிய முறையில் சிவந்த கண்களுக்கு தீர்வினை தர முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • செவ்வந்தி பூ டீ தூள் - ஒரு ஸ்பூன்
  • வெந்நீர் - 1 கப்
  • பஞ்சு - தேவைக்கு ஏற்ப
செய்முறை

முதிலில் ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் டீ தூளை சேர்க்கவும்.

பின் 5 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டவும். டீ சூடு ஓரளவு குறைந்தவுடன் பிரிட்ஜில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் இந்த தேநீர் பிரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, அந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து கண்களைக் கழுவவும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம்.

சிவந்த கண்களின் சிகிச்சைக்கு செவ்வந்தி பூ டீ மிகச் சிறந்த நன்மைகளைச் செய்கிறது. இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, கண்களில் உள்ள வீக்கத்தைக் குறைத்து அழற்சியைப் போக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers