நெஞ்செரிச்சலால் அவதியா ? அப்போ இந்த இயற்கை க்ரீன் டீக்களில் ஒன்றை குடிச்சாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியது என சொல்லப்படுகின்றது.

Gerd எனப்படும் செரிமானக் கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிகமுக்கியமான அறிகுறி.

உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, (ஒரு வாரத்துக்கும் மேல் கரகரப்பான குரலில் பேசுவது, அதிகம் தண்ணீர் தாகம் எடுப்பது முதலியவை) இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

அந்தவகையில் நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க க்ரீன் டீ குடிப்பது சிறந்தது என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் க்ரீன் டீயில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும், இது செரிமான சுழற்சிக்கு மிகவும் உதவுகிறது.

மேலும் க்ரீன் டீயை இயற்கையான முறையில் உட்கொள்வது மிகச் சிறந்தது. மேலும், இதில் சில இயற்கை உணவுப் பொருட்களை சேர்ப்பதால் இன்னும் ஆரோக்கியத்தைச் சேர்க்கும்.

தற்போது நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த கூடிய க்ரீன் டீக்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.

  • இயற்கை க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிபினைல்கள் அதிகமாக உள்ளது. இது நல்ல செரிமான செயலுக்கு உதவுகிறது. மேலும், இது அமிலத் தன்மையினால் செரிக்காத உணவை ஊணவுக்குழாய்க்கு திரும்ப வருவதைத் தடுக்கிறது.
  • எலுமிச்சையுடன் கூடிய க்ரீன் டீ வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலைப்படுத்துகிறது. எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இது செரிமான செயலை ஒழுங்குப்படுத்தும்.
  • தேன் கலந்த க்ரீன் டீயில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை சிறந்த செரிமான செயலுக்கு உதவும். இதுவே உண்மையாகவே அமில ரெஃப்லக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்தாகும்.
  • கற்றாழை கலந்த க்ரீன் டீயில் கிளைகோல் புரதம் உள்ளது. இது வயிற்றில் ஏற்படும் வலி, உப்புசம் மற்றும் அமில ரெஃப்லக்ஸ் சரி செய்யும். இதை குடிப்பதால் செரிமான வேலை துரிதப்படுத்தப் படுகிறது.
  • க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் இதில் அதிகப்படியான அமிலத் தன்மையை சமநிலை படுத்தும். மேலும் அமில உணவுகளை சீக்கிரம் சமன் செய்துவிடும். இது அமில ரெஃப்லக்ஸ் மற்றும் செஞ்செரிச்சலைக் குறைக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்