இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா ?

Report Print Kavitha in ஆரோக்கியம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி.

சாதாரணமாக வாரத்தில் ஓரிரு முறை இறைச்சி உணவை சாப்பிடுவது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக இருக்கும்.

உணவுக் கட்டுப்பாடு என்று வந்தவுடன், முதலில் அனைவரும் ஒதுக்க வேண்டிய உணவும் இறைச்சி தான்

அந்தவகையில் இறைச்சி உணவை தவிர்ப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • இறைச்சி உணவைத் தவிர்க்கும் போது, குறைந்தது 3 - 4 கிலோ வரை உடல் எடையில் மாற்றம் ஏற்படும்.
  • சைவம், அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவம் சாப்பிடும் போது 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறையும்.
  • நீங்கள் திடீரென இறைச்சி உணவுகளை கைவிட்டு முற்றிலுமாக சைவ உணவுகளுக்கு மாறும் போது, ருசியில் பெரும் மாற்றத்தை உணர்வீர்கள்.
  • இறைச்சி மற்றும் முட்டைகளில் புரதச்சத்து மிகுதியாக இருக்கின்றது. எனவே, நீங்கள் இறைச்சி உணவுகளை கைவிடும் போது, அதற்கேற்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், தசைகளின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.
  • பெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் இறைச்சி உணவை கைவிடும் போது, உடல் சூடு குறையும். உடல்நிலையில் இலகுவான நல்ல மாற்றம் காண இயலும்.
  • இறைச்சி உணவுகள் கடின உணவு வகையை சார்ந்தவை. எனவே, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால், நீங்கள் இறைச்சி உணவை தவிர்க்கும் போது, செரிமானம் சீராகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்