உங்களுக்கு அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

மேல் வயிற்று வலி பித்தப்பை அல்லது கல்லீரலில் பிரச்சனைகளால் வரக்கூடும் என சொல்லப்படுகின்றது.

பித்தப்பை கற்கள், ஹெபடைடிஸ், கல்லீரல் சுருக்கம் போன்றவற்றாலும் மேல் வயிற்று வலி வரும்.

ஒருவேளை வலியானது வயிறு அல்லது உணவுக்குழாயில் இருந்து ஆரம்பமானால், அதற்கு நெஞ்செரிச்சல், இரைப்பைக் குடல் அழற்சி நோய் அல்லது ஹேயாடல் குடலிறக்கம் போன்றவைகள் காரணங்களாகும்.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தினமும் போதுமான அளவு நீரைக் குடியுங்கள். அத்துடன் எலுமிச்சை ஜூஸ், இளநீர், நற்பதமான பழங்கள் அல்லது காய்கறி ஜூஸைக் குடியுங்கள்.
  • தினமும் இரண்டு வேளை சுடுநீர் குளியலை 15 நிமிடம் மேற்கொள்ளுங்கள். இதனால் வயிற்று வலி நீங்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை, மேல் வயிற்று வலி போகும் வரை குடிக்க வேண்டும்.
  • ஒரு துணியில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் தரையில் படுத்து, வயிற்றின் மேல் அந்த துணியை வைத்து, அதன் மேல் 30 நிமிடம் சுடுநீர் பாட்டிலைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2-3 மாதம் செய்யுங்கள்.
  • இஞ்சியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம் அல்லது இஞ்சி துண்டை வாயில் போட்டு நாள் முழுவதும் மென்று கொண்டிருக்கலாம்.
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் சூடான பாலில் போட்டு கலந்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும்.
  • 1 கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் அதிமதுர பொடியை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு வாரம் குடிக்க வேண்டும்.
  • ஒரு கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் 2-3 கப் குடியுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்