அடிக்கடி சிறுநீர் பிரச்சினையால் அவதியா?அதை தடுக்க இதோ சில வழிகள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

சிறுநீர்ப்பை அதிகளவு வெப்பத்துடன் இருந்தாலோ அல்லது சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ தான் அடிக்கடி சிறுநீர் வருவதுண்டு.

பொதுவாக ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அப்போது உடலில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.

மேலும் நீரிழிவு நோயாளிகள் கூட இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக ஆல்கஹால், டீ அல்லது காபி குடித்தாலும் இந்நிலை ஏற்படுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • மாதுளையின் தோளை பேஸ்ட் செய்து, அதில் ஒரு சிட்டிகை எடுத்து நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • கொள்ளுவை சிறிது எடுத்து, அதனை வெல்லத்துடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
  • எள்ளை வெல்லம் அல்லது ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.
  • தேன் மற்றும் துளசியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால், நிச்சயம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் இருந்து விடுபடலாம்.
  • அன்றாடம் உணவில் தயிர் சேர்த்து வந்தால், தயிரில் உள்ள புரோபயாடிக் சிறுநீர்ப்பையில் உள்ள தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும்.
  • வெந்தயத்தை அப்படியே அல்லது அதனை பொடி செய்து, தேனுடன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • நல்ல நறுமணமிக்க எண்ணெய்களான சந்தன எண்ணெய், டீ-ட்ரீ ஆயில் போன்றவற்றைக் கொண்டு அடிவயிற்றை மசாஜ் செய்து வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கலாம்.
  • பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலைன். சிறுநீரின் pH அளவை சீராக பராமரித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இரவில் படுக்கும் முன் பசலைக்கீரையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அவை சிறுநீர் அடிக்கடி வருவதைத் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்