காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படும்?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் ஒரு நாள் முழுவது ஆற்றலுடன் இருக்க காலையில் சாப்பிடும் உணவு தான் உதவியாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய அவசர உலகில் பலரும் வேலைக்கு செல்ல வேண்டும் அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகின்றது. ஆனால் இது உடல் ரீதியாக பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் காலை உணவினை தவிர்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும்.
  • உணவைத் தவிர்ப்பதால் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் ஹார்மோன்களான ’டோபமைன்’ (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இதனால் பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக வெளியாகத் தொடங்கும்.
  • சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும்.
  • காலை உணவை தவிர்ப்பதனால் எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் , வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள கிருமிகளின் ஆதிக்கத்தை அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  • குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்.
  • முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும்.
  • காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்