குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க வேண்டுமா? இந்த உணவுகள் மட்டும் போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

குடலில் உள்ள ஒட்டுண்ணிகளால் இரைப்பை குடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட குழந்தைகளும் பெரியர்வர்களும் இவ்வகையான தொற்றுக்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றார்கள்.

முதலாமானது நாடாப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், நாக்குப் பூச்சிகள் மற்றும் முதலுயிரி (ப்ரோடோசுவோ) போன்ற ஒட்டுண்ணி புழுக்கள் மற்றொரு வகை மனித உடலில் பலவகையாக பெருக்கெடுத்து, தீவிர தொற்றுக்களை உருவாக்கி விடுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.


 • பூண்டை ஊறுகாய் போன்று பயன்படுத்தலாம் அல்லது உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதனை தினசரி அடிப்படையில் உண்ணுங்கள். குடல் ஒட்டுண்ணிகளுக்கு சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
 • 2 டீஸ்பூன் வெங்காய ஜூஸை தினமும் இரண்டு வேளை குடியுங்கள். இதனை 2 வாரங்களுக்கு தொடரவும். இது ஒட்டுண்ணிகள் கொன்று விடும். குடல் ஒட்டுண்ணிகள் சிகிச்சைக்கான சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
 • தேங்காய் எண்ணெயில் கொழுப்புகள் நம் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். உங்கள் உடல் அமைப்பில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். இதனால் மேலும் பிற தொற்றுக்கள் உருவாகாமல் அது தடுக்கும்.
 • பூசணிக்காய் விதைகளில் செரிமான அமைப்பில் உள்ள ஒட்டுண்ணிகளின் மீது இயற்கையான எதிர்ப்பியாக செயல்படுகிறது. குடல் ஒட்டுண்ணிகளை அவை குணமாக்கும். உடலில் இருந்து அவைகளை வெளியேற்ற இது உதவும்.
 • பப்பாளி விதையில் லேசான காரமான சுவை உள்ளதால் இதனை அப்படியே பச்சையாக உண்ணலாம். அல்லது சாலட் மற்றும் பிற உணவுகளில் தூவியும் உண்ணலாம். குடல் ஒட்டுண்ணிகளுக்கான சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்று.
 • அன்னாசிப்பழம் ப்ரோம்லைன் என்ற செரி நொதி உள்ளதால் இது நாடாப்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணி தொற்றுக்களை நீக்க உதவும். அன்னாசிப்பழத்தை ஜூஸாக அல்லது அப்படியே கூட தினமும் உட்கொள்ளலாம். இது குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றி விடும்.
 • பாதாம்களில் உள்ள கொழுப்பமிலத்தின் உயரிய செறிவே இதற்கு காரணமாகும். தினமும் விடியற்காலையில் பாதாம் உண்ணுங்கள்.
 • கற்றாழையில் உள்ள பேதி ஊக்கி குணங்கள் ஒட்டுண்ணிகளை உங்கள் உடலிலிருந்து வெளியேற்றும். ஜூஸ், ஜெல், பொடிகள் மற்றும் மாத்திரைகள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.
 • மாதுளைப்பழ ஜூஸில் ஒட்டுண்ணி எதிர்ப்பி குணம் இருப்பதால் அதனை பயன்படுத்தலாம். இது துவர்ப்பி தன்மையை இது கொண்டுள்ளதால், குடல் ஒட்டுண்ணிகளை இது உடலில் இருந்து வெளியேற்றும்.
 • கற்பூரவள்ளி எண்ணெய் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த எண்ணெய்யை சில சொட்டுகள் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை தினமும் மூன்று முறை குடிக்கவும். இந்த கலவையில் வைட்டமின் வேண்டுமானால் அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • கருப்பு வால்நட் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். இந்த மூலிகையில் உள்ள பிற பொருட்கள் ஒட்டுண்ணிகளை கொல்லும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்