படுத்ததும் தூங்க வேண்டுமா? இதோ சூப்பர் கை வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய உலகில் பொதுவாக அனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாதது ஆகும்.

ஆனால் சிலபேருக்கு படுத்ததும் துக்கம் வருவது என்பது மிகவும் கடினமானதாகும். இதற்கு காரணம் வேலைச்சுமையே ஆகும்.

நல்ல உறக்கம் வேண்டும் எனில் மனதை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் படுத்ததும் தூக்கத்தை பெற கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டல் போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • சின்ன வெங்காயத்தை நீரில் உப்புப் போட்டு வேக வைத்து. நன்கு வெந்த பிறகு அந்த நீரை வெள்ளை சாதத்துடன் சேர்த்து இரவு பிணைந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் பெறலாம்.
  • திப்பிலி வேர் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து மிதமான அளவில் சூடு செய்த பாலுடன் சேர்த்து, உடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும். இதை படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
  • பாகற்காய் சாற்றை நல்லெண்ணையில் கலந்து உறங்கும் முன்னர் உச்சந்தலையில் தேய்த்து படுத்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
  • வேப்பமர இலைகளை வறுத்து சூடோடு தலையில் வைத்து வந்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
  • சர்பகந்தா எனும் செடியின் வேரை பொடியாக்கி, அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து காலை, இரவு இருவேளை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்