ஞாபக மறதி அதிகமாயிடுச்சா? கருவேப்பிலையை இப்படி செஞ்சு குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது வாழ்க்கையில் ஞாபக மறதி என்பது எல்லோரிடமும் காணப்படும் குறைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

ஞாபக மறதி என்பதை ஆங்கிலத்தில் Dementia என்றழைக்கப்படுகின்றது.

மூளையின் செயல்திறன் குறையும் ஒரு நிலையாகும். இது பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம் எனப்படுகின்றது.

அந்தவகையில் அதிலிருந்து விடுபட நமது பெரியோர்கள் கருவேப்பிலையை பயன்படுத்தி வந்தார்கள். ஞாபக மறதிக்கு கருவேப்பிலை சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஞாபக மறதியையும் குணப்படுத்தும் கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை - ஒரு கப்
  • தண்ணீர் - 2 கப்
  • சீரகம் - சிறிதளவு
  • வெல்லம் - சிறிதளவு
  • கருப்பு உப்பு - சிறிதளவு

செய்முறை

சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.

ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

மேலும் கறிவேப்பிலை புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்தது. ரத்த சோகையை குணப்படுத்தும் அதுமட்டுமல்ல. உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்துகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...