மஞ்சள் காமாலையிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமா? இதோ எளிய குறிப்புக்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.

உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

மஞ்சள் காமாலையின் போது பிலிரூபின் அளவுகள் அதிகரிக்கும் போது முதன் முதலில் நிறம் மாறக் கூடிய திசு விழிகளில் உள்ள விழிவெண்படலமாகும்.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தினமும் 1-2 டம்ளர் கரும்புச் சாறு குடித்து வாருங்கள். ஏனெனில் இது நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மஞ்சள் காமாலை போக்க பெரிதும் பயன்படுகிறது.
  • மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரம் மீள 3-4 பூண்டு பற்களை தினமும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
  • தினமும் 1டம்ளர் திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • 12 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 30 மில்லி லிட்டருடன் கலந்து கல்லீரல் இருக்கும் பகுதியான அடி வயிற்றில் அப்ளே செய்யுங்கள். லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இது நல்ல பலனை தரும்.
  • உணவில் விட்டமின் டி அதிகமான உணவை எடுத்துக் கொண்டால் பிறக்கின்ற குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம்.
  • 1 டீ ஸ்பூன் வறுத்த பார்லி பொடி யை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு விடலாம்.
  • தினமும் இரண்டு துளசி இலைகளை மென்றோ அல்லது துளசி டீ போட்டு குடித்தோ வரலாம். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஹெப்போப்ரக்டிவ் தன்மை மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.
  • 2-3 நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்றாக குளிர்ந்த பிறகு அதனுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள்.
  • 2-3 தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதன் தோலை உரித்து வேக வைத்த தக்காளியை பிசைந்து தண்ணீர் சேர்த்து அந்த ஜூஸை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்