உடல் எடையை குறைக்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடை பிரச்சினை என்பது பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது.

இதற்காக சிலர் நாளுக்கு நாள் ஜிம்மிற்கும் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு அவஸ்தைப்பட்டு கொண்டு உள்ளனர்.

உடல் எடையைக் குறைக்க என்ன தான் பல்வேறு இயற்கை வழிகள் இருந்தாலும், அதில் எடையையும் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது.

இதில் ஜூஸை போட்டு வெறும் வயிற்றில் குடிப்பதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது.

குறிப்பாக உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • உருளைக்கிழங்கு - தேவையானவை
  • தேன் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - (தேவை என்றால்)
செய்முறை

முதலில் நல்ல நற்பதமான உருளைக்கிழங்குகளை எடுத்து நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் ஜூஸரில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஜூஸர் இல்லாவிட்டால், உருளைக்கிழங்குகளைத் துருவி, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 100 முதல் 150 மிலி உருளைக்கிழங்கு ஜூஸைக் குடிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். ஜூஸ் குடிக்கும் போது, அதை நற்பதமாக தயாரித்து உடனே பருகுங்கள்.

தேவை என்றால் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உருளைக்கிழங்கு ஜூஸின் சுவை சற்று சுவையானதாக இருக்கும்.

உருளைக்கிழங்கு ஜூஸை தினமும் என்று குறைந்தது இரண்டு வாரம் குடிக்க வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விட்டு, வேண்டுமானால் மீண்டும் இரண்டு வாரங்கள் குடிக்கலாம்.

இப்படி நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வரை இந்த ஜூஸைக் குடிக்கலாம்.

முக்கிய குறிப்பு

உருளைக்கிழங்கு ஜூஸைத் தயாரித்த உடனேயே பருக வேண்டும். எக்காரணம் கொண்டும், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பருகக் கூடாது.

முக்கியமாக உருளைக்கிழங்கு ஜூஸைக் குடித்தால், குறைந்தது 1/2 மணிநேரமாவது இடைவெளி விட்டு காலை உணவை உண்ண வேண்டும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான உணவுகளைத் தான் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் எடைக் குறைவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வீணாகிவிடும்.

வேறு நன்மைகள்
  • உருளைக்கிழங்கு ஜூஸில் காரத்தன்மை உள்ளதால், இது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்க உதவும் மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும்.
  • உருளைக்கிழங்கு ஜூஸ் கீல்வாதத்தை சரிசெய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.
  • உருளைக்கிழங்கு ஜூஸ் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
  • உருளைக்கிழங்கு ஜூஸ் மிகச்சிறந்த உடலை சுத்தம் செய்யும் பானம். அதுவும் இந்த பானத்தைக் குடித்தால், அது கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்