வெள்ளை அரிசிக்கு பதிலாக இந்த அரிசியை சாப்பிடுங்க... சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
554Shares

கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. இது அரிசி வகைகளின் ஆரோக்கிய வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கிறது.

வட கிழக்கு நாடுகளில் சக் ஹோ என்றும் தென்னிந்தியாவில் கவுனி அரிசி என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் அளவுக்கு அதிகமான அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து உள்ளன.

கருப்பு அரிசியில் காணப்படும் அந்தோசயனின் உள்ளடக்கம், மற்ற தானியங்களை விட அதிகம் இருப்பதால், சிவப்பு அரிசி, திணை அரிசி போன்றவற்றை விட இது ஒரு சிறந்த உணவாக திகழ்கின்றது.

இந்த அந்தோசயனின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் இந்த தானியத்தில் இருப்பதால், இதனை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், புற்று நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் தடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் அதிகம் உள்ளன. ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம் கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது.

அந்தவகையில் இந்த கருப்பு அரிசியினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கருப்பு கவுனி அரிசி, உடலில் அழற்சி உண்டாக்கும் கூறுகளைக் குறைத்து, அழற்சி எதிர்ப்பு கூறுகளை அதிகரிக்கும் இதனால் புற்று நோய், ஒவ்வாமை மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சி தொடர்புடைய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
  • கருப்பு அரிசியில் காணப்படும் பல்லூட்டச்சத்துகள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளைப் போக்க உதவுகிறது.
  • க்ளுடன் ( Gluten) ஒவ்வாமை இருந்து உங்களுக்கு செலியாக் நோய் பாதிப்பு இருந்தால், உங்கள் தினசரி உணவு அட்டவணையில் கருப்பு அரிசியை இணைத்துக் கொள்ளலாம்.
  • நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.
  • எடை அதிகரித்து உடல் பருமனால் கவலைப்படுபவர்கள் நிச்சயம் கருப்பு அரிசியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் விரைவாக உங்கள் எடை குறையும்.
  • மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தின் முக்கிய காரணமான தமனியில் கொழுப்பு படிதலை குறைக்க கவுனி அரிசி உதவுகிறது.
  • இதய நோய்க்கான மற்ற இரண்டு முக்கிய காரணிகளை குறைக்கவும் கருப்பு கவுனி அரிசி உதவுகிறது,

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்