உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?அப்போ இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் உங்க உணவில் சேர்த்துக்கனுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

40 வயதை தாண்டினாலே பல நோய்கள் நம்மை வந்து ஆக்கிரமித்து கொள்கின்றது.

இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளும் காரணமாக அமைகின்றது.

நமது பழங்கால உணவிலிருந்து சுக்கை பயன்படுத்திவருகிறோம். இது எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும்.

அதுமட்டுமின்றி நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்.

மேலும் இதனை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும்
  • 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்து வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.
  • சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும்.
  • சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
  • வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
  • மத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.
  • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை நீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.
  • சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.
  • சுக்கை , வர கொத்துமல்லியுடன் சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து அதனை சாப்பிட்டால் மதுவினால் ஏற்பட்ட போதை அடியோடு குறைந்துவிடும்
  • சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.
  • தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers