உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா? எப்படி சரி செய்வது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவது பொதுவானப் பிரச்சினை தான்.

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள்.

மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில் இதன் போது சில பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் தள்ளி போகின்றது. இதிலிருந்து விடுபட மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது ஒன்றாகும்.

இதனை இயற்கை வழிகளில் கூட சரி செய்ய முடியும். தற்போது அதனை பார்ப்போம்.

  • 3 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்
  • இஞ்சியுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் கருப்பை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். பின் இரத்த போக்கும் தடையின்றி வரும். தேவைப்பட்டால் டீயில் தேன் கலந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடிக்கத் துவங்குங்கள்.
  • வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். இதே முறையைப் பயன்படுத்திச் சோம்பும் உண்ணலாம்.
  • வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம்.
  • வெல்லம் , மஞ்சள், பேரிச்சை . மாதுளை , காரட் , பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ் சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.
குறிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் மாதவிடாய் வரும் நாட்கள் தள்ளிப் போனாலோ அல்லது மாதவிடாய் நாட்களுக்கு முன்னரே வர வேண்டுமெனில் 10 அல்லது 5 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டும்.

சீரான முறையில் தடையின்றி இரத்த போக்கு வேண்டுமென்றாலும் இந்தக் குறிப்புகளை மூன்று நாட்களுக்கு முன்னரே செய்யலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்