சீனர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த உப்பு தான் காரணமாம்! அப்படி என்ன இரகசியம் இந்த உப்பில் மறைத்துள்ளது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

சீன வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவோர் அதிகமான உள்ளனர். இன்று எங்கு பார்த்தாலும் சீன உணவுகள் இருப்பது பிரபல்யமாகி கொண்டே போகின்றது.

இதற்கு காணரம் சீன வகை உணவுகளில் பெரும்பாலும் "அஜினோமோட்டோ" என்கிற உப்பு வகை சேர்க்கப்படுவது தான்.

இதை ஆங்கிலத்தில் Monosodium glutamate என்று கூறுவார்கள்.

இது சீன உணவுகளில் பெரும்பாலும் சுவைக்கான சேர்க்கப்படுகின்றது. இதனை பலரும் பல நாடுகளில் விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

இருப்பினும் சிலர் அஜினோமோட்டோ சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் மோசமான நோய்கள் உடலில் உண்டாகும் என பலரை இதனை நினைத்து தவிர்த்து வருகின்றனர்.

தோல் நோய்கள், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம் முதலிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகிறது என கூறப்படுகிறது

உண்மையில் அஜினோமோட்டோ உப்பு பற்றி 1968 ஆம் ஆண்டு முதல் தான் இந்த வகையான வதந்திகள் பரவப்பட்டது.

இதனை தொடர்ந்து அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி American Chemical Society) இதை ஆய்வு செய்து, இந்த உப்பை சீரான அளவில் எடுத்து கொண்டால் பாதிப்பில்லை என கூறி விட்டது.

அத்துடன் இதை அதிக அளவில் எடுத்து கொண்டால் சில பாதிப்புகள் சிலருக்கு ஏற்பட கூடும் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

சீனர்கள் இந்த வகை உப்பை உணவில் சேர்ப்பதற்கு என்ன காரணம் ?

இந்த உப்பை மிதமான அளவு சீனர்கள் எல்லா வித உணவுகளிலும் சேர்ப்பார்களாம்.

இதற்கு இது இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், அதிக ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம் என கருதுகின்றார்கள்.

அதுமட்டுமின்றி வயதான காலத்தில் நமது நாக்கில் உள்ள சுவையை தர கூடிய உணரிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பட்டை இழந்திருக்கும். இதை தடுக்க இந்த உப்பு இவர்களுக்கு உதவுகிறதாம்.

சீனர்கள் இந்த வகை உப்பை உணவில் சேர்ப்பதனால் என்ன நன்மை?

இந்த அஜினோமோட்டோ உப்பை உணவில் சீரான அளவு சேர்த்து சாப்பிட்டால் பசியின்மையை போக்கி விடுமாம். அத்துடன் உடல் எடை கூடும் பிரச்சினையையும் இது குறைக்குமாம்.

இந்த வகை உப்பை உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறு நீங்கும். மலச்சிக்கல், அஜீரண பிரச்சினை உள்ளோர்க்கு இது சிறந்த தீர்வை தரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்