வாரத்தில் இரண்டு நாள் இந்த பீன்ஸை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுங்க...இந்த நோய் எல்லாம் தீருமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
235Shares

கடற்படை பீன்ஸ் என அழைக்ப்படும் நேவி பீன்ஸ் ஃபெசோலஸ் வல்காரிஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.

இதனை ட்ரை பீன்ஸ், ஹாரிகாட் பீன்ஸ், பீ பீன்ஸ் மற்றும் குள்ள பீன்ஸ் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

100 கிராம் நேவி பீன்ஸில் 337 கிலோ கலோரிகள், 12.10 கிராம் தண்ணீர் சத்து உள்ளது.

இது உடம்பில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது.

மேலும் இதில் மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன.

 • பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால் மார்பக புற்று நோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 • பீன்ஸில் குறைந்த கிளைசெமிக் இன்டஸ் மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளதால் இது குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோய் வருவதை தடுக்கிறது.
 • பீன்ஸ் ஹச் டி எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ஹீமோசைட்டஸின் அளவையும் குறைக்கிறது. மக்னீசியம் இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.
 • இந்த பீன்ஸில் உள்ள மாங்கனீஸ் மற்றும் காப்பர் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை தடுக்கிறது. இதில் உள்ளமாங்கனீஸ் நாள்பட்ட இரத்த அழுத்த நோய்கள் வராமல் காக்கிறது. காப்பர் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. உடம்பின் ஒட்டுமொத்த செயல்களையும் மேம்படுத்துகிறது.
 • பீன்ஸில் உள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை மேம்படுத்துதல், மலச்சிக்கலை தடுத்தல் மற்றும் குடல் நோய்க்குறி போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் வயிற்று போக்கு, அல்சர் போன்றவற்றை சரி செய்கிறது.
 • பீன்ஸில் உள்ள இரும்புச் சத்து மற்றும் காப்பர் ஹூமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அனிமியா, இரத்த ஓட்டம், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளை களைகிறது.
 • நேவி பீன்ஸில் அதிகளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது செல்கள், தசைகள், எலும்புகள், திசுக்கள், இரத்த குழாய்கள் மற்றும் பிற பாகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • நேவி பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமத்தை பாதிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
 • நேவி பீன்ஸில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் கலோரிகள் உடல் எடையை இழக்க உதவுகிறது.
 • நேவி பீன்ஸ் சருமம் வயதாகுவதை தடுத்து புதிய சரும செல்களை புதுப்பிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் ப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து நம்மை காத்து வயதாகுவதை தடுக்கிறது.
 • பீன்ஸில் உள்ள போலேட், மக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் எலும்பு முறிவை தடுக்கவும் உதவுகிறது.
 • நேவி பீன்ஸில் உள்ள காப்பர் அழற்சியை போக்க பயன்படுகிறது. ஹெபடைடிஸ், ஆஸ்துமா மற்றும் மலம் கழித்தலில் பிரச்சனைகளை களைகிறது.
 • முடி உதிர்தல் பிரச்சனையை போக்குகிறது. இதில் அதிகளவு பொட்டாசியம், இரும்புச் சத்து இருப்பதால் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
 • நேவி பீன்ஸ் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அலசி வெளியேற்றுகிறது. இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்பு போன்றவை உள்ளன. எனவே இது எளிதில் சீரணிக்கக் பட்டு கல்லீரல் நோய் வராமல் தடுக்கிறது.
பக்க விளைவுகள்

ஒரு நாளைக்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலி ஏற்படும். பச்சையாகவோ அல்லது நன்றாக சமைக்காத நேவி பீன்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது நச்சாகும்.

மேலும் இப்படி சாப்பிடும் போது கால்சியம் உறிஞ்சுவதை தடைபடுத்தும்.

சிறுநீரக நோய் மற்றும் பலவீனமான சிறுநீரக உறுப்பு கொண்டவர்கள் இதை சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்