உடற்பருமனை அதிகரிக்கச் செய்யும் கைப்பேசி பாவனை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையால் பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதாக ஏற்கனவே பல ஆய்வுகளின் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில் உடற்பருமன் அதிகரிப்பிற்கும் கைப்பேசி பாவனைக்கும் தொடர்பிருப்பதாக மற்றுமொரு ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாள்தோறும் குறைந்தது 5 மணி நேரம் கைப்பேசியினை பயன்படுத்தி வந்தால் உடற்பருமன் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக கொலம்பியாவை சேர்ந்த 1,060 மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 700 பெண் மாணவிகளும், 360 ஆண் மாணவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் 19 மற்றும் 20 வயதினை உடையவர்களாவர்.

இந்த ஆய்வின் முடிவில் 5 மணி நேரத்திற்கு அதிகமாக கைப்பேசியினை பாவிப்பவர்களின் உடற்பருமன் அதிகரிப்பதற்கு 43 சதவீத வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர அதிக சர்க்கரை உள்ள பானங்களை அருந்துபவர்கள் மற்றும் அதிக பாஸ்ட் பூட், சுவீட்ஸ், ஸ்னாக்ஸ் ஆகியவற்றினை உண்பவர்களை விடவும் கைப்பேசியினை 5 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்துபவர்களுக்கு உடற்பருமன் அதிகரித்தல் மற்றும் இதய கோளாறுகளுக்கான சாத்தியம் இரு மடங்காக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பேசியினை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது எந்தவிதமான உடல் அசைவுகளும் இன்றி ஒரே இடத்தில் இருப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்