3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கனுமா? அப்போ இந்த 8 மணி டயட்டை பின்பற்றுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையை குறைப்பதற்காக பல கடினமான டயட்டுகள் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது.

அதில் 8 மணி நேர டயட் என்பது எல்லா டயட் முறைகளிலும் மிகவும் எளிய முறை ஆகும்.

ஏனெனில் 10 மணி முதல் 6 மணி வரை உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். மீதி 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது

இந்த உணவு முறை மூலம் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம்.

இந்த டயட் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், பாட் கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என பார்ப்போம்.

என்ன சாப்பிடலாம்?
 • அனைத்து வகை பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம்.
 • புரோட்டினுக்கு பீன்ஸ், சோயா, பரப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கனின் மார்பு போன்றவற்றை சாப்பிடலாம்.
 • கோதுமை, பழுப்பு அரிசி, குயினோ போன்றவற்றை சாப்பிடலாம்.
 • அனைத்து வகை பால் பொருட்களையும் சாப்பிடலாம்.
 • உங்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தாத எந்த மசாலாப் பொருளையும் பயன்படுத்தலாம்.
என்ன சாப்பிடக்கூடாது?
 • கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை தவிர்க்கவும்.
 • குறிப்பாக தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
 • மது அருந்துபவராக இருந்தால் அதனை குறிப்பிட்ட அளவில் மட்டும் அருந்தவும்.
 • அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
டயட்டின் பலன்கள்
 • உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்புக்களை வெளியேற்றும்.
 • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
 • உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.
 • உடலில் அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றுகிறது.
 • டைப் 2 டையாபிடிஸ் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
 • ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது.
 • ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பக்க விளைவுகள்

டயட்டின் ஆரம்ப காலத்தில் சோர்வு, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவது, ஆபத்தான நொறுக்குதீனிகளை சாப்பிடுவது எடை குறைப்பிற்கு வழிவகுக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...