அடிவயிற்று கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ சித்தர்களின் ஆயுர்வேத குறிப்புகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய கால சந்ததியினர் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றார். .

இதன் விளைவாக உடல் பருமன் கூடி பெரிய தொப்பையை வந்துவிடுகின்றது.

அதுமட்டுமின்றி அடிவயிற்றில் கொமுப்புக்கள் படிந்து பெரும்பாலும் பெண்கள் அடிவயிறு சதையினை குறைக்க முடியமால் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்.

அந்தவகையில் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பல உள்ளன. தற்போது அதில் சிலவற்றை பார்ப்போம்.

 • மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும்.
  • தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும்.
  • விஜயசார் எனப்படும் மூலிகை உடல் எடையை குறைக்கவும் மற்றும் குறிப்பாக அடி வயிற்று கொழுப்பை இது விரைவிலே குறைக்குமாம்.
  • தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள்.
  • தினமும், இரவு உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த திரிபலா பொடியை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடியில் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகள் காணாமல் போய்விடும்.
  • தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவிலே குறையும். மேலும், ரத்த ஓட்டம் சீரடைந்து உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.
  • உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த புனர்நவா மூலிகையை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.
  • இலவங்கப்பட்டையும் உதவும். சீரான முறையில் உடலில் செயல்பாட்டை இது வழி நடத்துகிறது. இலவங்கப்பட்டை டீ காலையில் குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம்.

  • முருங்கையை டீ போன்று குடித்து வந்தால் உடல் எடை கச்சிதமாக மாறும். மேலும், சீரான உடல் நலத்தையும், ரத்த ஓட்டத்தையும் முருங்கை டீ தரும். அடி வயிற்று கொழுப்புக்களை இந்த டீ ஒரு சில வாரத்திலே குறைத்து விடுமாம்.

  மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்