சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? இந்த பழத்தின் விதைகளே மட்டும் சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது.

நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

அதுமட்டுமின்றி இதன் இலைகள் ,விதைகள் எல்லாமே மருத்துவ பயன்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த நாவல் விதையில் jamboline மற்றும் jambosine என்ற மூல பொருட்கள் உள்ளன. இதுதான் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.

குறிப்பாக இது இன்சுலின் அளவை உயர்த்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.

இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு சிறுநீர் பிரச்சினைக்கும் ஜீரண கோளாறுகள், வயிற்று புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றை இது சரி செய்யும்.

அந்தவகையில் நாவல் விதைகள் எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

எப்படி சாப்பிடலாம்?

முதலில் நாவல் பழத்தை உரித்து அவற்றின் உள் இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.

பின் விதைகளை சுத்தமாக கழுவி அவற்றை வெயிலில் 4 நாட்கள் உலர விட வேண்டும். அவை நன்கு காய்ந்த பிறகே வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

அடுத்து அந்த தோலை உடைத்து எடுத்தால், பச்சை நிறத்தில் சிறிய கோட்டை அதனுள் இருக்கும்.

இதனை மறுபடியும் 2 நாட்கள் வெயிலில் உலர விட்டு எடுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின் இவற்றை சலித்து கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பொடியை நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.

வேறு நன்மைகள்

  • நாவல் விதைகளில் hyperglycaemia வை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறப்படுகின்றது.

  • இந்த நாவல் பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாகும்.

  • உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.

  • நாவல் இலைகளை நன்கு கழுவி அவற்றை மென்று சாப்பிட்டால் அல்சர் குணமடையும்.

  • நாவல் பழத்தில் உள்ள அதிக படியான இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உயர்த்துகின்றது.

  • இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த வழி செய்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த நாவல் பெரிதும் உதவுகிறது.

  • மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு மிக சிறந்த முறையில் இது பயன்படும்.

குறிப்பு

மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.

அத்துடன் கர்ப்பிணிகள் இந்த நாவலை சாப்பிடுதல் உகந்தது அல்ல.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers