குழந்தை பெற்றதும் எடையை குறைக்க! நடிகைகள் இதைத் தான் பண்றாங்களாம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

பெண்களுக்கு இயல்பாகவே திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் எடை கூடிவிடும்.

இதற்கு கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. கர்ப்ப காலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம்.

இக்கால கட்டத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகும், முக்கியமாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும், இதயம் வேகமாக துடிக்கும், மார்பகங்கள் பெரிதாகும்.

முகம், கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும், வயிறு, இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்புகள் சேரும், இதனால் எடை அதிகரிக்கிறது.

பிரசவம் முடிந்து ஆறு மாதங்களில் இயல்பாகவே எடை குறைய ஆரம்பிக்கும், அது நிகழாத பட்சத்தில் எடை அதிகரிப்பதை ணரலாம்.

ஒரு தாய் சரிவிகித உணவை உட்கொண்டு குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை கொடுக்கும் போது ஒருநாளைக்கு 500 கலோரி வரை இழப்பு ஏற்படும், ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுத்தால் மீண்டும் பழைய எடைக்கு சுலபமாக வந்துவிடலாம்.

எனினும் 20 சதவிகித தாய்மார்கள் எடை அதிகரிக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது, இதற்கு பிரசவத்துக்கு பின் ஏற்படும் மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு மற்றும் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றமும் காரணமாக இருக்கும்.

எது எவ்வாறாயினும் முடிந்தளவான உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவுகள் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதன் சுலபமாக எடையை குறைக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்