உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யனுமா? இதோ சிறந்த நிவாரணிகள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நமது உடலில் ஏதாவது வலிகள் ஏற்பட்டால் மருந்துவரை கூட சந்திக்கமால் வலி நிவாரணிகளை போடுவது தான் வழக்கம்.

கடைகளில் விற்கப்படும் கண்ட மருந்துகளை போடுவதனால் அவை தற்காலிகமான தீர்வினை தருமே தவிர, நிரந்தரமானவை தராது.

மேலும் இவ்வாறு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அவை இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவிடும்.

எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, இயற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம்.

அந்தவகையில் நமது உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிகளைப் தற்போது பார்ப்போம்.

தொண்டையில் புண்

தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒற்றை தலைவலி

காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால், ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காது வலி

காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால், உடனே வலி நீங்கிவிடும்.

பல் வலி

சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும்.

தசைப் பிடிப்பு

உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால், பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

மாதவிடாய் பிடிப்புக்கள்

தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்த நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.

பாத வலி

பாத வீக்கத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.

முதுகு வலி

நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். ஏனெனில் முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும்

வீக்கத்தை குறைக்கும்

மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.

மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

நெஞ்செரிச்சல்

அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.

கால் பிடிப்பு

இரவில் ஏற்படும் கடுமையான கால் பிடிப்புக்கு உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

அடிவயிற்று வலி

சால்மன் அல்லது டூனா மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம். ஏனெனில் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை

சிறுநீரகப் பாதை தொற்று

சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத்தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.

மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

வாயுத் தொல்லை

வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

மார்பக வலி

மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில் சேர்த்தால், அது அந்த வலியை கட்டுப்படுத்தும்.

தசைப்புண்

அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால், அது வலியைக் குறைத்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers