பருவமடைந்த பெண்கள் சாப்பிட வேண்டியவை

Report Print Abisha in ஆரோக்கியம்

பருவமடைந்த பெண்கள் உண்ணவேண்டிய உணவு மற்றும் அதன் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

கருப்பு உளுந்து

களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்து பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம்.

நல்லெண்ணெய்

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லது

நாட்டு முட்டை

தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரை வகைகள்

ரத்தச்சோகை வராமல் இருக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை எடுத்துக்கொள்ள வேண்டும்

பாகற்காய், சுண்டைக்காய்

சில பெண் குழந்தைகளுக்கு உடலில் ரத்த அளவு குறைவால் மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும்.

இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். அவர்கள் உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

சத்துமாவு உருண்டை

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு என நவதானியங்களால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை தினமும் சாப்பிட வேண்டும்

கொண்டைக்கடலை

கருப்பு கொண்டைக் கடலையை வேகவைத்தோ அல்லது முளைக்க வைத்தோ வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்