இதய நோயிலிருந்து விடுபட வேண்டுமா? அப்போ இந்த டீயை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பல்வேறு மருத்துவகுணங்கள் இருக்கின்றது என அனைவரும் அறிந்த தகவலே.

ஒருவர் தினமும் ஒரு கப் மாம்பழத்தில் டீ போட்டு குடிப்பதனால் பல்வேறு பயன்களை தருகின்றது.

குறிப்பாக இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் இரத்த குழாய்கள் உடைந்து போவதை தடுக்கிறது.

அதுமட்டுமின்றி மாவிலைகளும் தேநீர் தயாரிக்க பயன்படுகின்றன.

ஏனெனில் இதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளன.

எனவே உங்கள் விட்டமின் பற்றாக்குறையை போக்கி போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வளமுடன் வாழ இந்த தேநீர் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த தேநீரில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. உலர்ந்த மாங்காயில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

அந்தவகையில் இந்த டீயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மாம்பழம்- 2 மீடிய வடிவ
  • பிளாக் டீ அல்லது டீ பேக்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 3 கப்
  • லெமன் ஜூஸ்
  • சுத்திகரிக்கப்படாத சர்க்கரை
  • ஜஸ் கட்டிகள்
பயன்படுத்தும் முறை

மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மாம்பழ கூழ் தயாரித்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

கொஞ்சம் தண்ணீரை சுட வையுங்கள். இப்பொழுது ப்ளாக் டீயை சூடுபடுத்திய தண்ணீரில் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்

இப்பொழுது 5 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும் .பிறகு டீயை வடிகட்டி 20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்

டீ குளர்ச்சியானதும் அதை மிக்ஸி சாரில் ஊற்றவும்

இப்பொழுது அதனுடன் குளிர வைத்த மாம்பழ கூழ், ஐஸ், லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்க்கவும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.

ஒரு நீளமான கண்ணாடி கிளாஸில் டீ யை ஊற்றி புதினா இலைகளை அப்படியே தூவி விடவும்.

இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் இதயக் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து உயிரை காக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்