என்னதான் நல்ல வாசனை சோப்பு தேய்த்து குளித்தாலும், என்னுடைய வியர்வை வாசம் என்னைவிட்டு போக மாட்டேன் என்று புழப்பிக் கொண்டு இருப்பார்கள்.
கோடைக்காலத்தில் வெயிலில் அதிகம் வெளியில் செல்பவருக்க வியர்வை அதிகமாக சுரக்கப்படுவதுண்டு.
குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுப்பொருள் வியர்வையில் கலப்பதாலேயே துர்நாற்றம் வருகிறது.
வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது, பாக்டீரியா தொற்றால் வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
அந்தவகையில துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
- மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகலாம். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
- பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதாலும் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால், வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.
- வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள், நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் விலகி விடும்.