காலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க....ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கற்றாழை ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்தவகையில் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் அது மிகவும் உடலுக்கு நல்லது. அதை ஜூஸாக செய்து தேன் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எப்படி குடிப்பது?

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

இந்த அற்புத பானத்தை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நன்மைகள்
  • தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இயற்கையாகவே உடல் எடை குறையும்.
  • கற்றாழை ஜூஸில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
  • உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த நினைத்தால், கற்றாழை ஜூஸை காலை உணவிற்கு முன் குடியுங்கள்.
  • கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடித்தால், இந்த கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள், செல்கள் சீரழிவது தடுக்கப்பட்டு, உடற்செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • கண் பிரச்சனைகள் வராமல் இருக்க, காலை உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடியுங்கள். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ ஏராளமான அளவில் உள்ளதால் கண்களில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளித்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • கற்றாழை ஜூஸில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலினுள் காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, விரைவில் குணமாகவும் செய்யும்.
  • ஒருவர் தனது அன்றாட டயட்டில் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், உடலினுள் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்துப் போராடி, தீங்கு விளைவிக்கும் நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்.
  • கற்றாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் ஆற்றலை நாள் முழுவதும் சீராக வைத்திருக்கும்.
  • கற்றாழையும் தேனையும் ஒன்றாக கலந்து கர்ப்பிணிகள் குடித்தால், அது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • கற்றாழை ஜூஸில் தேன் கலந்து ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...