அன்னாசி பூவை உணவில் சேர்க்கலாமா? நன்மைகள் ஏராளமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இந்தியாவில் பழங்காலம் முதலே அதன் மசாலாப்பொருட்களுள் அன்னாசி பூ என்று அழைக்கப்படும் நட்சத்திர சோம்பு பயன்பாட்டில் உள்ளது.

இது பிரியாணி மற்றும் அனைத்து வகையான அசைவ உணவுகளிலும் சுவைக்காகவும், வாசனைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது.

இந்த மசாலா பொருள் உணவில் சேர்க்கப்படும்போது உணவிற்கு தனித்துவமான இனிப்பு மற்றும் கார சுவையை கொடுக்கிறது

இந்த அன்னாசி பூ முதன் முதலில் சீனாவில் பயன்படுத்தபட்டது. சீனர்கள் இதனை மருந்து பொருளாக பயன்படுத்தினர் என சொல்லப்படுகின்றது.

இதில் ஆன்டி ஆட்சிடென்ட், வைட்டமின்-ஏ வைட்டமின்-சி போன்ற பல சத்துக்கள் இருக்கிறது.

இந்தியர்கள் இதனை கரம் மசாலாவில் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இதிலிருக்கும் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக இதனை மருந்து பொருளாக பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி இது பல்வோறு மருத்துவப்பயன்பாட்டில் உதவிபுரிகின்றது. தற்போது இதனை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

நன்மைகள்
  • அன்னாசிப் பூவின் கலோரிகள் குறைவு, எனவே, உடல் பருமன் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் போது இதை அதிகளவு சேர்க்கலாம்.
  • இது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளளும் போது ஜீரண கோளாறுகளை நீக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
  • இரத்த செல்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு இது தீர்வு அமைகிறது.
  • குழந்தைகளுக்கு செரிமானத்திற்கும், பெரியவர்களுக்கு காயங்களை குணப்படுத்தவும், அழற்சியை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • அன்னாசி பூ விலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி, வறட்சி, சரும நோய்கள் போன்றவைறைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.
  • அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்தஅழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ பயன்படுகின்றது.
  • வளரும் குழந்தைகளுக்கு அன்னாசிப்பூ கொடுக்கும் போது அவர்கள் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள்.
  • அன்னாசிப்பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக அஜீரண கோளாறு நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்