சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா? இந்த மூலிகை பயன்படுத்துங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நெருஞ்சில் தாவரத்தை சிறு நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது.

நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு கொண்டது.

குளிர்ச்சி தரும், சிறுநீர் எரிச்சலைப் போக்கும் ,சிறுநீர் பெருக்கும் ,காமம் பெருக்கும், உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும், ஆண்மையைப் பெருக்கும், இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும்.

அதுமட்டுமின்றி நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும்.

அந்தவகையில் நெருஞ்சில் என்னென்ன நோய்களை குணப்படுத்த பயன்படுகின்றது என்பதை பார்ப்போம்.

  • நெருஞ்சில் 50 கிராம் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, 500 மி.லி. நீரில் போட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. வீதம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க சிறுநீர்க் கடுப்பு குணமாகும்.
  • நெருஞ்சில் சூரணம் ½ கிராம் முதல் 1 கிராம், 1 டம்ளர் மோரில் கலந்து, தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • நெருஞ்சில் முழுத்தாவரத்தையும் இடித்துப் பிழிந்த சாறு 50 மி.லி.யுடன், 1 டம்ளர் மோர் கலந்து குடிக்க சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படும்.
  • நெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து, காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, காலை, மாலை 1½ தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்துவர ஆண்மை பெருகும்.
  • நெருஞ்சில் செடி 2, அருகம்புல் ஒரு கைப்பிடி, ஒரு லிட்டர் நீரில் நசுக்கிப்போட்டு, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில் 3 நாட்கள் வரை குடிக்க உடல் சூட்டால் ஏற்படும் கண்எரிச்சல். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
  • நெருஞ்சில் தாவரத்தைக் காய வைத்துக் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில் குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
  • கல்லடைப்பு நோயால் உண்டாகும் குறிகுணங்களைக் குறைக்கவும், சுரத்தைத் தணிக்கவும் உதவும்.
  • இரண்டு கைப்பிடி அளவு யானை நெருஞ்சில் இலைகளை 200 மி.லி. நீரில் ஊறவைத்து மூன்று தேக்கரண்டி சர்க்கரை கலந்து, சிறிது நேரம் கலக்க, நீர் வெண்ணெய் போல் குழகுழப்பாகும். அந்த நீரைப் பருக உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்