சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா? இவற்றை செய்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஒருவர் அன்றாடம் போதுமான அளவு சிறுநீரைக் கழிப்பது என்பது அவசியமானதாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர்6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.

மேலும் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மி.லி சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும்.

இருப்பினும் 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.

இன்றைய காலத்தில் பலரும் தண்ணீர் அருந்துவதை குறைத்து கொண்டே செல்வதனால் சிறுநீரின் உற்பத்தி குறைந்து பல நோய்களுக்கு உள்ளாகிவிடுகின்றோம்.

அந்தவகையில் சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • சிறுநீர் கழிப்பதை அதிகரிக்க நினைத்தால், குடிக்கும் நீரின் அளவை அதிகரியுங்கள். இல்லாவிட்டால் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
  • ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் காய்ந்த டான்டேலியன் வேரைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி 10 நிமிடம் மூடி வையுங்கள். பின் அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து தினமும் 2 கப் குடியுங்கள். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் செலரி விதைகளை சேர்த்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி, தினமும் ஒரு முறை குடித்து வாருங்கள்.
  • ஒரு கப் கொதிக்கும் நீரில் 1 டேபிள் ஸ்பூன் நற்பதமான பார்ஸ்லியை போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, தினமும் 2-3 முறை குடியுங்கள். அதுவும் தொடர்ந்து 2 வாரங்கள் குடிக்க நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • தினமும் குடித்து வந்தால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும் மற்றும் இது சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களைத் தடுக்க உதவும். ஆகவே அடிக்கடி இளநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும். இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றி, நீர்த்தேக்கத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
  • ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் உலர்ந்த கார்ன் சில்க்கை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும் .

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்