மாதவிடாய் காலத்தில் மார்பகம் கடுமையாக வலிக்கின்றதா? இதனை போக்க சில இயற்கை வைத்திய முறைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் ஒருவித வலியை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக இந்த வலி மாதவிடாய் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களினால் தான் வருகிறது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ளவற்றில் ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

 • மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலி குறையும்.
 • உளுந்தை அரைத்து பற்று போட்டாலும் மார்பகத்தில் உண்டாகும் வலி குறையும்.
 • உங்களுக்கு மார்பகத்தில் இனம் புரியாத ஒரு வலி உண்டாகும். இதற்கு நீங்கள் சூடான தண்ணீரை பருகலாம். அல்லது சூடான ஏதாவது திரவ ஆகாரத்தை பருகலாம். டீ குடிக்கலாம் இதனால உங்களது உடலில் உள்ள வாயுக்கள் வெளியேறிவிடும்.
 • ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, மார்பக பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனை 10 முதல் 20 நிமிடங்கள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் உங்களது மார்பகத்தில் உள்ள வலியானது 48 முதல் 72 மணிநேரத்தில் சரியாகிவிடும்.
 • ஒரு டம்ளர் பாலை எடுத்து, அதில் 6 முதல் 8 பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டுகளை போட வேண்டும். அதன் பின்னர் பாலை சூடாக்க வேண்டும். இந்த பாலை பூண்டுடன் சேர்த்து குடித்துவிட வேண்டும். இவ்வாறு குடிப்பதால் மார்பக வலி குணமாகும்.
 • அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை எடுத்து அதை ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும். இதில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளை போட்டு குடித்தால் மார்பகத்தில் உள்ள வலி நீங்கும்.
 • ஒரு துளி அளவு பேக்கிங் சோடாவை சூடான ஒரு கப் தண்ணீரில் கலந்து, குடித்தால் அசிடிட்டி குறைந்துவிடும். இது உங்களது மார்பக வலியிலிருந்து நிவாரணம் கொடுக்கும்.
 • விளக்கெண்ணை மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒன்றாக கலந்து மார்பக பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்தால் உங்களது மார்பகத்தில் உண்டாகும் வலிகள் குறைந்துவிடும்.
 • சிறிதளவு சீரகத்தை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அதை காய்ச்சி சீரகத்தை வடிகட்டி விட்டு அந்த சீரக நீரை அருந்தினால் மார்பக வலி குறைந்துவிடும்.
 • வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது மாதவிடாய் கால மார்பக வலிகளை சரி செய்ய கூடியதாகும். மார்பக வலிகளுக்கு இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
 • இளநீர் உள்ள பொட்டாசியமும், நீர்ம சத்தும் உங்களது மார்பக வலியை சரி செய்துவிடும் தன்மை உடையது.
 • முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
 • உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
 • கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
 • இலந்தை இலை, மாதுளை இலை இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாள் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்