காளானை உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.

இருப்பினும் இதனை பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் இருக்கின்றது.

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது.

சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.

அதிலும் சாப்பிட கூடிய காளானில் பல சத்துக்களும் பல நோய்களுக்கு தீர்வளிக்க கூடியதாக இருக்கின்றது.

இதில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்தவகையில் காளானை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • காளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.
  • 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
  • எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
  • காளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதே சமயத்தில் குறைந்தளவு தான் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிலிருக்கும் ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவிடுகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் ப்ரோட்டீனும் கொலஸ்ட்ராலை கரைக்க உதவிடும்.
  • ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் காளான் சாப்பிடலாம். காளானில் இரும்புச் சத்து அதிகமுண்டு.
  • காளானில்அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் , நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளாணில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers