நட்சத்திர வடிவிலான இந்த பூ மனநல பாதிப்பை கூட சரிசெய்யுமாம்!

Report Print Kabilan in ஆரோக்கியம்

வேட்டை பாக்கு செடி எனும் தாவரத்தின் பூ மனச்சோர்வு, தூக்க பிரச்சனைகள், மனநல பாதிப்பு போன்ற பிரச்னைகளை குணப்படுத்தும்.

நட்சத்திர வடிவிலான 5 இதழ்களைக் கொண்ட இந்த தாவரத்தின் மஞ்சள் பூக்கள் பல நன்மைகளை கொண்டுள்ளன.

மனச்சோர்வு

இந்த பூவில் உள்ள ஹைபரிசின் என்ற ரசாயனம் போன்ற பொருள், நமக்கு ஏற்படும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. இதனை சாப்பிட்டு வந்தால் பதட்டம், பயம், சோர்வு போன்ற தொல்லைகள் இருக்காது.

மாதவிடாய் பிரச்னைகள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றம், வெள்ளைப்படுதல், பசி, தூக்கமின்மை, தலைவலி, குழப்பம் போன்றவற்றை சரி செய்ய பெண்களுக்கு இந்த பூ உதவுகிறது.

காயங்களை குணப்படுத்துதல்

இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் களிம்பு மற்றும் எண்ணெய் காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்க பயன்படுகிறது.

இதர நன்மைகள்

கவன பற்றாக்குறை, மூளைக்கட்டிகள், ஒற்றைத் தலைவலி, ஹெர்பஸ், சரும எரிச்சல், ரத்த குழாய்களில் அடைப்பு, பல் வலி, காயங்கள், தசை வலி, வயிற்று வலி போன்றவற்றையும் இந்த பூ குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.

பக்க விளைவுகள்

இதனை எடுத்துக் கொள்ளும்போது வேறு மருந்துகளுடன் தொடர்பு கொண்டால் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே இந்த பூவை மருந்தாக எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்