உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்பவர்கள் சுவையாக சாப்பிட இதனை செய்யலாம்!

Report Print Kabilan in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்ளும் நபர்கள் எந்த வகையான முறையில் சுவையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

ஆரோக்கிய பிரச்னைகளின் பெருக்கத்தினால் பலர் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை தவிர்த்து டயட்டை மேற்கொள்கிறார்கள். டயட்டை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் பழங்களையே எடுத்துக் கொள்கின்றனர்.

எனினும், பழங்களுடன் சேர்த்து சுவையைத் தரும் வேறு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுப்பொருட்களையும், அவர்கள் சாப்பிடலாம். அவ்வகையான பழத்தின் சுவையையும் மேலும் கூட்டும் உணவுகள் குறித்து காண்போம்.

ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை எண்ணெய்

நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக ஆப்பிளில் நிறைந்துள்ளன. வேர்க்கடலை வெண்ணெய் வழுவழுவென்று வேர்க்கடலை மணத்துடன் நிறைந்துள்ளதால், ஆப்பிளுடன் இதனைச் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையுடன் இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் பிடிக்கும் என்பவர்கள் உடனே இவற்றை சுவைத்து பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சொக்லேட் டிப்

டார்க் சொக்லேட் பாரை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அதில் டிப் செய்து சாப்பிட வேண்டும். இந்த சொக்லேட்டில் உள்ள பல ஆன்டி ஆக்சிடண்டுகள் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மறுபுறம் ஸ்ட்ராபெர்ரியில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, எடையைக் குறைக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீராக்கும் பண்புகளும் அதிகம் நிறைந்துள்ளது.

ஃபெடா சீஸ் திணிக்கப்பட்ட பேரிச்சம் பழம்

சீஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானது ஃபெடா சீஸ். சற்று உப்பாக இருக்கும் இதனை, பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு அதனுள் திணிக்க வேண்டும்.

இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.

மாம்பழம் மற்றும் தயிர்

மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புபவர்கள், அதனை துண்டுகளாக்கி தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை உணவுகளின் மீது உள்ள பிரியம் தணியும்.

அத்திப்பழம் மற்றும் ஆட்டுப்பால் சீஸ்

ஆட்டுப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. அத்திப்பழத்தில் பாலை விட அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

எனவே இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், நாவிற்கு நல்ல சுவையையும் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்