பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்னையை தீர்ப்பது எப்படி?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பருவ நிலை, உணவு முறை போன்ற காரணங்களால் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று தான் சளி பிரச்னை.

ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்ற பின் வேறு நோய்களையும் மாறி விடும்.

அதனால் சளியை ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் நல்லது.

இதனை எளதில் போக்க கூடிய வீட்டு மருத்துவ குறிப்பு ஒன்றை இங்கு பார்ப்போம்.

தேவையாவை
  • வெற்றிலை - 1
  • இஞ்சி - சிறிய துண்டு
  • தேன் - தேவையான அளவு
செய்முறை

முதலில் வெற்றிலை காம்பை நீக்கிவிட்டு வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி விடவும். அதன் பின்னர் அதனுடன் இஞ்சியை சேருங்கள்.

நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல்,சளி , ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.

குறிப்பாக இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடுத்து கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்