ஆரோக்கியமாக பற்களை வைத்திட வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் ஆரோக்கியமும் உங்களுடைய பற்களில் வெளிப்படும் என கூறுவார்கள்.

பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். இல்லாவிடின் கிருமிகள் தாக்கி நோயை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • கிராம்பு, ஓமம், கற்பூரம்ஆகியவற்றை எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறுவீக்கம்தீரும்.
  • புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால்பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
  • அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள்நன்கு உறுதியாக இருக்கும்.
  • பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமானநோய்கள் நம்மை அணுகாது.
  • நெல்லிக்காயை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
  • கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய்நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்