இன்றைய காலகட்டத்தில் பெருமளவானவர்களின் பிரச்னையாக உடல் எடை அதிகரிப்பு காணப்படுகின்றது.
இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை தேடியவண்ணம் உள்ளனர்.
இதற்கு பல வழிகள் காணப்படுகின்றபோதிலும் இலகுவான சில முறைகளும் காணப்படுகின்றன.
இந்த வரிசையில் மூலிகைகளின் அரசன் என வர்ணிக்கப்படும் துளசி இலையையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 4 அல்லது 5 துளசி இலைகளைப் பெற்று கொதிக்கும் நீரினில் போட வேண்டும்.
பின்னர் அச் சுடுநீரை ஒரு தேநீர் கோப்பையில் வடிகட்டிப் பெறவும்.
தொடர்ந்து சிறிதளவு தேனைக் கலந்து குடிக்க வேண்டும்.
நாள் ஒன்றிற்கு இவ்வாறு 2 முறைகள் அருந்திவந்தால் சிறந்த பலனைப் பெற முடியும்.