ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதனை செய்தால் போதுமே!

Report Print Kabilan in ஆரோக்கியம்

உயர் ரத்த அழுத்த பிரச்னையை சரி செய்வது உட்பட, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து இங்கு காண்போம்.

ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருந்தால் அது மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.

உயர் ரத்த அழுத்த பிரச்னையை ஒரு அற்புதமான மற்றும் சுவையான பானத்தின் உதவியுடனும் கட்டுப்படுத்தலாம். பசலைக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றின் மூலம் இதனை செய்யலாம்.

ஸ்மூத்தி

பசலைக்கீரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இதனை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ஜிங்க் ஆகிய சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை தருவதுடன், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

பசலைக்கீரை

வாழைப்பழத்தைப் போல் பசலைக்கீரையிலும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 100 கிராம் பசலைக்கீரையில் 558 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. அத்துடன் இதில் உள்ள இரும்புச்சத்தும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இன்றியமையாதது.

ஸ்மூத்தியின் செய்முறை
  • இரண்டு வாழைப்பழம், ஒரு கப் பசலைக்கீரை, அரை கப் ஆரஞ்சு ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி அல்லது அன்னாசி (சிறிதளவு) மற்றும் அரை தேக்கரண்டி ஆளி விதை (அ) சியா விதை (அ) பூசணி விதை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாழைப்பழங்களின் தோலை நீக்கிவிட்டு, பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு சாற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் அதில் பசலைக் கீரையை நீரில் அலசி சேர்த்து, அரை கப் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு விருப்பமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்ற பழங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • இறுதியில் அரைத்த ஸ்மூத்தியை தம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஆளி விதை அல்லது பூசணி விதை அல்லது சியா விதைகளைத் தூவி குடிக்கவும்.
நன்மைகள்

வாழைப்பழம் மற்றும் பசலைக்கீரையில் புரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், பல ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளும் இந்த ஸ்மூத்தியில் வளமான அளவில் நிறைந்துள்ளது.

எனவே, இந்த ஸ்மூத்தியை சாதாரணமாக ஒருவர் குடித்து வந்தால், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்